Home -> News -> Sports -> சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் 2019-ன் 18வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது.

161 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பஞ்சாப் அணி சென்னை அணியின் சிறப்பான பந்து வீச்சால் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

சிஎஸ்கே ஸ்பின்னர்கள், ஹர்பஜன், இம்ரான் தாஹிர், ஜடேஜா இணைந்து 12 ஓவர்களில் 61 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற கிங்ஸ் லெவன் எழும்ப முடியவில்லை. 11 ஒவர்கள் முடிவில் கிங்ஸ் லெவன் 75/2 என்று நல்ல நிலையில் இருந்தது, 12வது ஓவரை குக்கலீன் வீசினார்.

சர்பராஸ் கான் ஸ்கூப் ஷாட்டில் பவுண்டரி பிறகு மிக அருமையாக லாங் ஆஃபில் ஒரு அபார சிக்ஸ். இந்த ஓவரில் 16 ரன்கள் வர 12 ஒவர்கள் முடிவில் 91/2. மீதமுள்ள 8 ஓவர்களில் 70 ரன்கள் தேவை, கையில் 8 விக்கெட்டுகள் இருக்கின்றன.

இந்நிலையில் அடிக்கத் தொடங்கியிருக்க வேண்டும் ராகுலும், சர்பராஸ் கானும். ஆனால் நடந்தது என்னவெனில் ஜடேஜா, ஹர்பஜன், இம்ரான் தாஹிர் வீசிய அடுத்த 5 ஓவர்களில் பவுண்டரியே வரவில்லை. இதுவே பஞ்சாப் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.