Home -> News -> Sports -> ஒரே ஆண்டில் 3 ஐசிசி விருதுகளை வென்று விராட் கோலி புதிய சாதனை!

ஒரே ஆண்டில் 3 ஐசிசி விருதுகளை வென்று விராட் கோலி புதிய சாதனை!

ஐசிசி-யின் 3 உயரிய விருதுகளையும் ஒரே ஆண்டில் வென்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.

2018-ஆம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் 3 உயரிய விருதுகளான ஐசிசி-யின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்ஃபீல்ட் சாபர்ஸ் விருது, சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது மற்றும் சிறந்த ஒருநாள் வீரருக்கான விருது ஆகியவற்றுக்கு விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் ஐசிசி-யின் 3 உயரிய விருதுகளையும் ஒரே ஆண்டில் வென்ற முதல் வீரர் என்ற புதிய சாதனையை விராட் கோலி படைத்தார்.

அதுமட்டுமல்லாமல் 2018-ஆம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கான கேப்டனாகவும் விராட் கோலி நியமிக்கப்பட்டார். முன்னதாக, 2017-ஆம் ஆண்டுக்கான ஐசிசி-யின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்ஃபீல்ட் சாபர்ஸ் விருதையும் விராட் கோலி வென்றிருந்தார். அதுபோன்று 2012 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் சிறந்த ஒருநாள் வீரருக்கான விருதுகளையும் விராட் கோலி வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*