Home -> News -> Sports -> 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்

157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்நிலையில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் உள்ள மெக்லீன் மைதானத்தில் இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்கம் முதல் இந்திய பந்துவீச்சாளர்களின் கையே ஓங்கி இருந்தது. குறிப்பாக முகமது ஷமி அதிரடியாக பவுளிங் செய்தார். இவர் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மார்டின் குப்தில் மற்றும் கொலின் முன்ரோ ஆகியோரின் விக்கெட்டை எடுத்தார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் விக்கெட்டை இழக்க அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் மட்டும் நின்று விளையாடி அதிகபட்சமாக 64 ரன்கள் சேர்த்தார்.

இந்திய அணியின் குல்திப் யாதவ் 4, முகமது ஷமி 3, சாஹல் 2 மற்றும் கேதர் ஜாதவ் 1 விக்கெட்களை எடுத்திருந்தனர்.தற்போது 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.