Home -> News -> Sports -> ரோகித் ஷர்மா சதம் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ரோகித் ஷர்மா சதம் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

உலக கோப்பை தொடரில் இந்திய அணி தன்னுடைய முதல் லீக் ஆட்டத்தில் தென்ஆப்ரிக்க அணியை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்தது.

தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் சாஹல் 4 விக்கெட்டுகளும், பும்ரா, புவனேஸ்வர் தலா 2 விக்கெட்டுகளும், குல்தீப் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள், இதன்மூலம் இந்திய அணிக்கு 228 ரன்களை தென்னாபிரிக்க அணி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து விளையாடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக தான் அமைந்தது. தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சில் அனல் பறந்தது. தென்னாபிரிக்க வீரர்கள் சில வாய்ப்புகளை வீணடிக்க, ஆனால் பயன்படுத்திக்கொள்ளாத, தவான் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த கோலியும் சொதப்ப 18 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் ரோஹித் நிதானம் குறையாமல் சில பவுண்டரி சிக்ஸர்களுடன் ரன்களை அடிக்க, ராகுல் அவருக்கு ஒத்துழைப்பு அளித்தார்.

ராகுலும் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அதன் பிறகு வந்த தோனி ரோஹித்துக்கு ஒத்துழைப்பை அளித்து வந்தார். தோனி ஒத்துழைப்புடன் ரோஹித் சதமடித்து அசத்தியுள்ளார். இறுதி நேரத்தில் தோனியும் 34 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதியில் வந்த பாண்டியா 3 பவுண்டரிகளை ஓடவிட்டு அணியை வெற்றி பெற வைத்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் ரோஹித் 122 ரன்களை அடித்திருந்தார். இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியுள்ளது.