Home -> News -> Sports -> ஐதராபாத்தில் டிசம்பர் 16ஆம் தேதி சாய்னா – காஷ்யப் திருமணம்

ஐதராபாத்தில் டிசம்பர் 16ஆம் தேதி சாய்னா – காஷ்யப் திருமணம்

ஐதராபாத்தில் பேட்மிண்டன் நட்சத்திரங்களான சாய்னா நேவாலும், பருப்பள்ளி காஷ்யப்பும் டிசம்பரில் திருமணம் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது

13 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் இருவரும், கோபிசந்த் பேட்மிண்டன் பயிற்சி கழகத்தில் சந்தித்துக் கொண்டனர். இருவர் இடையேயான நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதுகுறித்து அறிந்த சாய்னா – காஷ்யப்பின் குடும்பத்தினர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதன்படி, சாய்னா – காஷ்யப் திருமணம் ஐதராபாத்தில் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், முக்கியமான நபர்கள் சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உறவினர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 21ஆம் தேதி மிகப்பெரிய அளவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.