" /> My Title page contents
Home -> News -> Sports -> மழை காரணமாக 2வது டெஸ்ட் போட்டியின் முதல் ஆட்டம் ரத்து

மழை காரணமாக 2வது டெஸ்ட் போட்டியின் முதல் ஆட்டம் ரத்து

இங்கிலாந்துக்கு எதிரான 2வது நாள் டெஸ்ட் போட்டியின் முதல் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இந்திய அணி, 2வது டெஸ்ட் போட்டியை தொடங்குவதற்கு முன்பாகவே ஒரு பந்துக்கூட வீசாமல் போட்டி ரத்தானது.

இங்கிலாந்து – இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க இருந்தது. டாஸ் சுண்டப்படுவதற்கு முன் மழை பெய்தது. தொடர்ந்து மழைத்தூறல் இருந்து கொண்டே இருந்ததால் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கப்படவில்லை.

அதன்பின்னரும் மழைத்தூறல் விட்டுவிட்டு தூவிக் கொண்டிருந்ததால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். அதன்படி ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.