Home -> News -> Tamilnadu Politics -> அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாக தோற்கும் ‍: வைகோ பேட்டி

அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாக தோற்கும் ‍: வைகோ பேட்டி

அ.தி.மு.க.- பா.ஜ.க. எத்தனை கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தாலும் தோற்பது உறுதி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

திருநெல்வேலியில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-பாஜகவுக்கு வட மாநிலங்களில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தென் மாநிலங்களிலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. இந்த பயத்தால் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார்கள். ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு இவர்கள் ரூ.50 கோடி செலவழிக்க திட்டம் வகுத்துள்ளார்கள்.பணம் கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என்று அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியினர் நினைக்கிறார்கள். ஆனால் பணபலத்தை மக்கள் தூக்கி எறிந்து விட்டு எங்கள் கூட்டணிக்கு வெற்றி தருவார்கள். அந்த அளவுக்கு பா.ஜ.க. தமிழகத்துக்கு துரோகம் செய்துள்ளது.

தற்போதைய மத்தியஅரசு தமிழகத்திற்கு ஏராளமான வஞ்சகம் செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள 4½ கோடி வாக்காளர்களும் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.இதனால் அ.தி.மு.க.- பா.ஜ.க. எத்தனை கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தாலும் தோற்பது உறுதி. தி.மு.க. கூட்டணி வெல்வது உறுதி. தமிழகம்- புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.