Home -> News -> Tamilnadu Politics -> பிரதமர் மோடி குறித்து கல்லூரி மாணவிகளிடம் ராகுல் காந்தி தவறாக சித்தரிக்கிறார் – தலைவர் தமிழிசை

பிரதமர் மோடி குறித்து கல்லூரி மாணவிகளிடம் ராகுல் காந்தி தவறாக சித்தரிக்கிறார் – தலைவர் தமிழிசை

பிரதமர் மோடி குறித்து கல்லூரி மாணவிகளிடம் ராகுல் காந்தி தவறாக சித்தரிக்கிறார் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராகுல் காந்தி கல்லூரி மாணவிகளிடம் எதிர்மறை அரசியலை பரப்புகிறார். பிரதமர் மோடி குறித்து கல்லூரி மாணவிகளிடம் ராகுல் காந்தி தவறாக சித்தரிக்கிறார் என்றும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்னர் அவர் பேசியுள்ளது கண்டத்துக்குரியது. கல்லூரியை எதிர்களமாக மாற்றாதீர்கள் என்ற தமிழிசை, ஜிஎஸ்டி உள்ளிட்ட பல விஷங்களில் தோல்வி அடைந்தவர் ராகுல். இனியும் தோல்வி அடைய போகிறார் ராகுல் என்றார்.