Home -> News -> Tamilnadu Politics -> 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு இல்லை – டிடிவி தினகரன்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு இல்லை – டிடிவி தினகரன்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மதுரையில் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்றும், தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். காலியாக உள்ள 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்தால் அமமுக வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.

டிடிவி தினகரன் ஒரு மண் குதிரை என்றும், அவரை நம்பி ஆற்றில் இறங்கியவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது பற்றி கேட்டபோது, ‘மண் குதிரை யார் என்பதை, எங்கு தேர்தல் நடந்தாலும் மக்கள் நிரூபிப்பார்கள்’ என்றார் தினகரன்.