Home -> News -> Tamilnadu Politics -> அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் இன்று காலமானார்

அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் இன்று காலமானார்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் இன்று காலமானார்.

கோவை மாவட்டம் சூலூர் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக கனகராஜ் இருந்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை அவரது வீட்டில் நாளிதழ் படித்து கொண்டிருந்தபோது, மயக்கமடைந்து விழுந்துள்ளனர். உடனே அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், கனகராஜை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவருக்கு இரத்தினம் என்ற மனைவியும்., ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். மேலும்., தொகுதி மக்களுக்கு ஏதும் பிரச்சனை என்றால் முதல் நபராக வந்து உதவி செய்யும் நபர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார் என்று கண்ணீருடன் அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.