" /> My Title page contents
Home -> News -> Tamilnadu Politics -> திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார் – மு.க.ஸ்டாலின் விளக்கம்

திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார் – மு.க.ஸ்டாலின் விளக்கம்

 

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்பது வெறும் வதந்தி தான் என மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, கடந்த வருடம், உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை, ஆழ்வார்பேட்டை உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்க, தொண்டையில் துளையிட்டு, ‘டிராக்கியோஸ்டமி’ சிகிச்சை அளிக்கப்பட்டது

அதையடுத்து அவர் கடந்த ஒருவருடத்திற்கு மேலாக அவர் கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். வீட்டிலிருந்தபடியே அவருக்கு மருத்துவ சிகிச்சை தொடர்ந்து நடைபெற்றது.

இதற்கிடையே கடந்த 18 ஆம் தேதி மீண்டும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக, திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிரக்யாஸ்டமி கருவில் உள்ள பழைய குழாய் அகற்றப்பட்டு புதிய குழாய் மாற்றப்பட்டது. சிகிச்சை முடிந்ததை அடுத்து, அவர் கோபாலபுரம் வீட்டுக்கு திரும்பினார்.

இந்நிலையில், நேற்று செவ்வாய் கிழமை திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து திடீரென வீண் வதந்தி பரவியது. இதுகுறித்து திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, ”திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார், வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தலைவர் கருணாநிதிக்கு லேசான காய்ச்சல் காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.