Home -> News -> International News -> தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் ஜி. பாலசுப்பிரமணியன் நியமனம்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் ஜி. பாலசுப்பிரமணியன் நியமனம்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் ஜி. பாலசுப்பிரமணியனை நியமனம் செய்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேற்று (செப்டம்பர் 29) சென்னை ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டது. அதில், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக டாக்டர்.ஜி.பாலசுப்ரமணியனை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு இவர் இந்தப் பதவியில் தொடர்வார் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக பதவியேற்று கொண்ட பின் 3 ஆண்டுகள் அவர் அந்த பதவியில் நீடிப்பார். டாக்டர் ஜி. பாலசுப்பிரமணியன், தேசிய மற்றும் சர்வதேச அளவில் 22 ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். திராவிடன் பல்கலைக்கழக இணைவேந்தராக பதவி வகித்து வருகிறார்.