Home -> News -> Tamilnadu Politics -> ஈரோடு மக்களவைத் தொகுதியில் கணேஷ் மூர்த்தி – வைகோ அறிவிப்பு!!

ஈரோடு மக்களவைத் தொகுதியில் கணேஷ் மூர்த்தி – வைகோ அறிவிப்பு!!

ஈரோடு மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் கணேசமூர்த்தி போட்டியிடுகிறார்.

2019 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு கட்சிகள் தேர்தலுக்கான தீவிர செயற்பாட்டில் இறங்கியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நாளன்று இடைத் தேர்தல் வருவதால் கட்சிகள் கூடுதல் தீவிரம் காட்டியுள்ளனர்.

ஈரோட்டில் அதிமுக வேட்பாளராக கணேசமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார் இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில்

இந்திய நாடாளுமன்ற மக்கள் அவைக்கு நடைபெற இருக்கின்ற 17 ஆவது பொதுத் தேர்தலில், தி.மு.கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, கழகத்தின் பொருளாளர் அ. கணேசமூர்த்தி அவர்கள் போட்டியிடுவார்.