Home -> News -> Tamilnadu Politics -> திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக-வில் அனைவரும் சிறையில் இருப்பார்கள் – மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக-வில் அனைவரும் சிறையில் இருப்பார்கள் – மு.க.ஸ்டாலின்

நாகையில் திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுகவில் அனைவரும் சிறையில் இருப்பார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்

நாகை மாவட்டத்தில் நடைபெற்ற திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், சட்டமன்ற எண்ணிக்கையை காப்பாற்றிக்கொள்ள, அதிமுக உறுப்பினர்களுக்கு பல கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கான ஆதாரம் உள்ளது. இந்த ஆட்சியில் டெங்கு, மர்ம காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் போன்ற பாதிப்புகளால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். டெங்கு ஏற்படுத்தும் கொசுக்களை ஒழிப்பது போல, தமிழக அமைச்சர்களை ஒழித்தால் தான் தமிழகத்துக்கு முன்னேற்றத்தை பெற முடியும். திமுக ஆட்சிக்கு வந்தால் தற்போது அதிமுக-வில் உள்ள அனைவரும் சிறையில் இருப்பார்கள்.

ஆட்சியில் இல்லாத நேரத்திலும், மக்கள் மீது அக்கறை கொள்ளும் கட்சியாக திமுக உள்ளது. மக்களுக்கு தொண்டாற்றிட அண்ணா இந்த கட்சியை உருவாக்கினார். மக்கள் அளிக்கும் வரவேற்பை பார்க்கும் போது, ஆளுங்கட்சியாக இருப்பது அதிமுக-வா? அல்லது திமுக-வா? என்று சந்தேகம் எழுகிறது.கருத்து கணிப்புகளை திமுக ஒருபோதும் ஏற்றுக்கொண்டது இல்லை. கழக தொண்டர்களின் கருத்துக்கணிப்புகள் தான் திமுக-வுக்கு முக்கியம். அதை தான் கருணாநிதி செய்வார். திமுக தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறது என்று ஸ்டாலின் இந்த நிகழ்வில் பேசினார்.