Home -> News -> Tamilnadu Politics -> விவி மினரல்ஸ் நிறுவனத்தில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை

விவி மினரல்ஸ் நிறுவனத்தில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை

வி.வி மினரல்ஸ்க்கு சொந்தமான இடங்களில் 2ஆவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், கடற்கரையோரம் உள்ள மணலில் தாதுக்களை பிரித்து எடுத்து ஏற்றுமதி செய்யும் தொழிலை, வைகுண்டராஜனுக்குச் சொந்தமான விவி மினரல்ஸ் நிறுவனம் செய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு, செயல்பட்டு வரும் விவி மினரல்ஸ் நிறுவனத்தில் நேற்று காலை 6 மணிக்கு, வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். சென்னையில் மட்டும் 38 இடங்களில் சோதனை நேற்று தொடங்கியது. திருநெல்வேலி மாவட்டத்தில் 24 இடங்களிலும், தூத்துக்குடியில், 30 இடங்களிலும், கோயம்புத்தூரில் 2 இடங்களிலும், சோதனை நடைபெற்றது. இந்நிலையில், 100 இடங்களிலும் வருமான வரித் துறை சோதனை இன்று 2வது நாளாக நீடித்து வருகிறது.