Home -> News -> Tamilnadu Politics -> நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி : கமல்ஹாசன்

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி : கமல்ஹாசன்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும்மக்கள் நீதி மய்யம்கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் அளித்த பேட்டியில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம்தனித்துப் போட்டியிடும். எங்கள் கட்சியை பொறுத்தவரை கொள்கை தான் முக்கியம். தேர்தலில் சீட்பெறுவது அல்ல. எங்களது கொள்கையில் எந்த மாற்றுக் கருத்தும் முடிவு இல்லை. தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம்தங்களது வேட்பாளர்களை களத்தில் இறக்கும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவதன் மூலம் மற்ற கட்சிகள் ஆட்டம் காணும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.