Home -> News -> Tamilnadu Politics -> திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று சந்திப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று சந்திப்பு

முக தலைவர் மு.க.ஸ்டாலின் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் மே 23-ஆம் தேதி வர உள்ளன. தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே பாஜக, காங்கிரஸ் அல்லாத ஆட்சியை அமைப்பதற்கான முயற்சியில் சந்திரசேகர ராவ் ஈடுபட்டு வருகிறார்.

இதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்துப் பேசினார். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலனை அவரது இல்லத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்க உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பின் போது மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.