Home -> News -> Tamilnadu Politics -> சுயநலத்துக்காக 18 எம்எல்ஏ.,க்களை காவு வாங்கியவர் டிடிவி தினகரன் – அமைச்சர் உதயகுமார்

சுயநலத்துக்காக 18 எம்எல்ஏ.,க்களை காவு வாங்கியவர் டிடிவி தினகரன் – அமைச்சர் உதயகுமார்

தன்னுடைய சுயநலத்துக்காக இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற 18 எம்எல்ஏ.,க்களை காவு வாங்கியவர் டிடிவி தினகரன் என்று அமைச்சர் உதயகுமார் விமர்சித்து உள்ளார்.

சென்னையில் இன்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி. உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ.,க்களும் யாருடைய பேச்சைக் கேட்கக் கூடாதோ அவர்களுடைய பேச்சைக் கேட்டு, எதை இழக்கக்கூடாதோ அதை இழந்து இன்று பதிவியை இழந்து துன்பத்தில் இருக்கிறார்கள். எங்களை அழிக்க நினைத்து இப்போது அவர்களே அழிந்து விட்டார்கள்.வாயிலேயே வடை சுடுபவர் டிடிவி தினகரன். தீர்ப்புக்கு முன்பு நாங்கள் அப்படி இப்படி என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது எல்லாம் அனுபவம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தீர்ப்பினால் தினகரனுக்கு இழப்பு ஒன்றும் இல்லை.

சொல்லப்போனால், அவர் ஒருவருடைய நலனுக்காக, இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற 18 எம்எல்ஏ.,க்களை தான் காவு கொடுத்துவிட்டு, சுயேட்சையாக அவர் ஜெயித்து உள்ளார். ஒரு அரசு என்பது சாதாரண விஷயம் இல்லை. மக்களுக்கு சேவை செய்ய தான் அரசு அமைந்துள்ளது. அந்த அரசை வீட்டுக்கு அனுப்பிவிடுவேன் என்று சொல்லுவது தவறு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.