Home -> News -> Tamilnadu Politics -> நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடு

நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடு

நாடாளுமன்றம் மற்றும் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடப்போகும் ஆண், பெண் வேட்பாளர்கள் பட்டியலை நாம் தமிழர் கட்சி வெளியிட்டிருக்கிறது .

நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அதற்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் தொடர்ந்து செய்து வருகிறது. இதில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான நாம்தமிழர் கட்சி வேட்பாளர்பட்டியலை அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார்.

இதில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பட்டியலில், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, திண்டுக்கல், தேனி, கரூர், பெரம்பலூர், சிதம்பரம், தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, புதுச்சேரி, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும், திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, திருச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், பெண் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

21 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரம்பூர், ஆம்பூர், அரவக்குறிச்சி, நிலக்கோட்டை, விளாத்திகுளம், சாத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, சோளிங்கர், திருவாரூர், ஓட்டப்பிடாரம், ஓசூர் ஆகிய தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தஞ்சாவூர், அரூர், மானாமதுரை, குடியாத்தம், திருப்போரூர், திருப்பரங்குன்றம், பரமக்குடி, பூந்தமல்லி ஆகிய தொகுதிகளில் பெண் வேட்பாளர்களும் களமிறக்கப்பட உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.