Home -> News -> Tamilnadu Politics -> தமிழச்சி தங்கபாண்டியன் திமுக-வின் அழகான வேட்பாளர்: உதயநிதி!!

தமிழச்சி தங்கபாண்டியன் திமுக-வின் அழகான வேட்பாளர்: உதயநிதி!!

அழகான வேட்பாளரை பிரதிநிதியாக்கத் தவறிவிடாதீர்கள் என்று திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்காகப் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார் கவிஞரும் எழுத்தாளருமான தமிழச்சி தங்கபாண்டியன். அவருக்காக திமுக தலைவர் ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதி சைதாப்பேட்டையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தென் சென்னை வாக்காளப் பெருமக்களைக் கேட்டுக்கொள்கிறேன், இவ்வளவு அழகான வேட்பாளரை உங்களின் பிரதிநிதியாக அனுப்பத் தவறிவிடாதீர்கள்.

நான் அழகு என்றது அவருடைய தோற்றத்தை மட்டுமல்ல, அழகுத் தமிழ், தமிழ் மீது அவர் கொண்டுள்ள பற்று மற்றும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற கொள்கை ஆகியவற்றையும் சொல்கிறேன் என்றார். இதற்கிடையே உதயநிதியின் பேச்சைக் கேட்ட தமிழச்சி தங்கபாண்டியன், சிரித்துக்கொண்டே கீழே குனிந்துகொண்டார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.