Home -> News -> Tamilnadu Politics -> தமிழக மக்கள் தவறு செய்துவிட்டார்கள்! – தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக மக்கள் தவறு செய்துவிட்டார்கள்! – தமிழிசை சௌந்தரராஜன்

“தமிழக மக்கள் ஊழல் செய்யாத பாஜகவுக்கு வாக்களிக்காமல் தவறு செய்துவிட்டார்கள்” என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், அதிமுக கூட்டணி சார்பில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் போட்டியிட்டனர். இத் தொகுதியில் திமுக, பாஜக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உட்பட 37 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக வேட்பாளர் கனிமொழி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

தூத்துக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசையை விட 2 லட்சம் வாக்குகள் கனிமொழி முன்னிலைப் பெற்றுள்ளார். இந்நிலையில், மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன், பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தமிழக மக்களிடம் வாக்குகளை ஏன் பெறவில்லை? என நாங்கள் ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டும். தமிழக மக்கள் ஊழல் செய்யாத பாஜகவுக்கு வாக்களிக்காமல் தவறு செய்துவிட்டார்கள். பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என உணர்வார்கள். மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் உணர்ந்து வாக்களித்துள்ளார்கள் என தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.