Home -> News -> Tamilnadu Politics -> 8-ஆம் தேதி அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

8-ஆம் தேதி அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

மக்களவை தேர்தலையொட்டி வரும் 8-ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த உள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வரும் 8ஆம் தேதி அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்க எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அப்போது நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, பிரச்சார வியூகங்கள், தேர்தல் பணிகள் வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசிக்க உள்ளனர். பூத் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள முகவர்களை இறுதி செய்தும் மாவட்ட செயலாளர்களுக்கு ஒப்புதல் அளிக்க உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*