Home -> News -> Tamilnadu Politics -> தமிழக திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் மோடிக்கு எந்த அருகதையும் இல்லை – வைகோ

தமிழக திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் மோடிக்கு எந்த அருகதையும் இல்லை – வைகோ

தமிழக திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் மோடிக்கு எந்த அருகதையும் இல்லை என திருநெல்வேலியில் மதிமுக பொது செயலாளர் வைகோ கூறினார்.

நெல்லையில் நடந்த திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள மதிமுக பொது செயலாளர் வைகோ பத்திரிக்கையாளர்கள சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் மிக முக்கிய அரசியல் சூழ்நிலையில் இங்கு வந்துள்ளேன். ஸ்டெர்லைட் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் 5 வருடமாக நிலுவையில் உள்ளது.தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையின் கைக்கூலியாக உள்ளது. தமிழக அரசு வழக்கறிஞருக்கு போதிய ஆதாரம் இல்லை. ஸ்டெலைட்க்கு ஆதரவாக மாசு கட்டுப்பாட்டு வாரியமும் தமிழக அரசும் செய்ல்படுகிறது.

தமிழக திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் மோடிக்கு எந்த அருகதையும் இல்லை. அணை பாதுகாப்பு திட்டம் மூலம் தமிழகத்தின் பெரும் பகுதி பாலைவனமாக மாறப்போகிறது. விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தான் வெற்றி பெறும் . நடைபெற உள்ள தேர்தலில் பணத்தை நம்புகிறது பா.ஜ.க. இவ்வாறு அவர் தெரிவித்தார்.