Home -> News -> Tamilnadu Politics -> அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்து பட்ஜெட்டில் எதுவும் தீர்வு கூறப்படவில்லை – மு.க.ஸ்டாலின்

அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்து பட்ஜெட்டில் எதுவும் தீர்வு கூறப்படவில்லை – மு.க.ஸ்டாலின்

தமிழக அரசின் பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கு எந்த வகையிலும் உதவாத பட்ஜெட். வருவாய், வேலைவாய்ப்பை பெருக்குவதற்கான எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இல்லை என தமிழக பட்ஜெட் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

பட்ஜெட் குறித்து அவர் கூறியதாவது, தமிழக அரசின் பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கு எந்த வகையிலும் உதவாத பட்ஜெட். வருவாய், வேலைவாய்ப்பை பெருக்குவதற்கான எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இல்லை. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

நெல் கொள்முதலுக்கான விலை, கரும்புக்கான ஆதார விலையை அரசு உயர்த்தவில்லை. ரூ.4 லட்சம் கோடி கடனில் தமிழகம் தத்தளிக்கிறது.அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்து பட்ஜெட்டில் எதுவும் தீர்வு கூறப்படவில்லை. வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதை தான் பட்ஜெட் காட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*