Home -> News -> Tamilnadu Politics -> சேலம் மக்களவைத் தொகுதியில் வாக்களித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சேலம் மக்களவைத் தொகுதியில் வாக்களித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சேலம் மக்களவைத் தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரிசையில் நின்று வாக்களித்தார்.

பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வத்துடன் சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்கின்றனர். இதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் பலர் காலையிலேயே வாக்கை பதிவு செய்தனர். இந்நிலையில் சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரிசையில் நின்று வாக்களித்தார்.

தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன் கோபி அருகே குள்ளம்பாளையத்திலும், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைஞாயிறு அருகே உள்ள ஓரடியம்புரத்திலும் வாக்களித்தனர். ஆரணி அருகே உள்ள சேவூரில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வாக்களித்தார். சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தனது தாயார் நளினி சிதம்பரம் மற்றும் மனைவி ஸ்ரீநிதியுடன் காரைக்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முன்னதாக ப.சிதம்பரம் தனியாக வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.