Home -> News -> Tamilnadu News -> கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை

கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை

மக்​கள் நீதி மய்​யம் கட்சித் தலை​வர் கமல்​ஹா​சன், அர​வக்​கு​றிச்சி நீதித்​துறை நடு​வர் மன்​றத்​தில் ஆஜ​ராகி முன்​ஜா​மீன் பெற்​றுக் கொள்​ள​லாம் என சென்னை உயர்​நீ​தி​மன்ற மது​ரைக் கிளை ​​உத்​த​ர​விட்​டது.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே. என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில் பேசியிருந்தார். இது தொடர்பாக கமல்​ஹா​சன் மீது காவல் நிலையத்தில் இந்து முன்​ன​ணி​யினர் புகார் அளித்​ததை அடுத்து தனக்கு முன்​ஜா​மீன் வழங்​கக் கோரி நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தி​ருந்​தார்.

இம்​மனு ஏற்​கெ​னவே நீதி​மன்​றத்​தில் விசா​ர​ணைக்கு வந்​த​போது, அரசு குற்​ற​வி​யல் வழக்கறி​ஞர், கமல்​ஹா​ச​னுக்கு சம்​மன் அனுப்​பியே விசா​ரணை நடத்​தப்​ப​டும். விசா​ர​ணை​யில் அவ​ரது பதி​லில் திருப்​தி​யில்லை எனில் கைது செய்​யப்​ப​ட​லாம் எனத் தெரி​வித்​தார். இரு​த​ரப்பு வாதங்​க​ளை​யும் கேட்ட நீதி​பதி தீர்ப்பை ஒத்​தி​வைத்​தார். இந்​நி​லை​யில், நீதி​பதி பி. பு​க​ழேந்தி நேற்று அளித்த தீர்ப்​பில், மனு​தா​ர​ருக்கு முன்​ஜா​மீன் வழங்​கப்​ப​டு​கி​றது. கமல்​ஹா​சன் அர​வக்​கு​றிச்சி நீதித்​துறை நடு​வர் மன்​றத்​தில் 15 நாள்​க​ளில் ஆஜ​ராகி, 2 நபர்​க​ளின் உத்​த​ர​வா​தத்​து​டன் ரூ. 10 ஆ​யி​ரம் பிணைத் தொகை செலுத்தி முன்​ஜா​மீன் பெற்​றுக் கொள்​ள​லாம் என கு​றிப்​பிட்​டார்.