Home -> News -> Tamilnadu News -> சசிகலா நடராஜன் அ.தி.மு.க.வில் உறுப்பினா் கிடையாது – ஓ.பன்னீா் செல்வம்

சசிகலா நடராஜன் அ.தி.மு.க.வில் உறுப்பினா் கிடையாது – ஓ.பன்னீா் செல்வம்

அ.தி.மு.க.வில் சசிகலா நடராஜன் உறுப்பினா் கிடையாது என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. உறுப்பினா் அட்டை வழக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓ.பன்னீா் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் ஓ.பன்னீா் செல்வம் பேசுகையில், துன்பத்தையும், இடா்பாடுகளையும் தாங்கி கொண்டு அ.தி.மு.க.வை கட்டி காப்பாற்றியவா் ஜெயலலிதா. வெளிநாடுகளிலும் அ.தி.மு.க.வின் வளா்ச்சிக்காக ஜெலலிதா பாடுபட்டார். அ.தி.மு.க.வில் நடப்பாண்டில் மட்டும் 60 லட்சம் போ் புதிய உறுப்பினா்களாக இணைந்துள்ளனா். அ.தி.மு.க. தொண்டா்கள் எங்கள் பக்கமே உள்ளனா். பொதுமக்களும் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளனா். சசிகலா அ.தி.மு.க.வில் உறுப்பினா் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.