" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> தமிழகத்தில் சொத்து வரி 50ல் இருந்து 100 சதவீதமாக உயர்த்தி அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு

தமிழகத்தில் சொத்து வரி 50ல் இருந்து 100 சதவீதமாக உயர்த்தி அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு

சொத்து வரியை 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழக உள்ளாட்சி நிர்வாகத்துறை, குடியிருப்பு கட்டடங்களுக்கான சொத்து வரி தற்போது உள்ளதிலிருந்து 50 சதவிகிதத்திற்கு மிகாமல் உயர்த்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. அதாவது குடியிருப்புகளுக்கு 50%, வாடகை குடியிருப்புகள், குடியிருப்பு அல்லாத வணிக கட்டடங்களுக்கு 100% உயர்த்தப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆணை சென்னை பெரு மாநகராட்சி, அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், நகர பஞ்சாயத்துகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வரி உயர்வு ஜூலையிலிருந்து அதாவது, இந்த மாதத்தில் இருந்தே அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சொத்துவரி கடந்த 20 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

ஊராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி பெரிய அளவில் இருக்காது. ஆனால், நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் சொத்துவரி சற்று அதிகமாக இருக்கும். இதனால், தனி வீட்டில் வசிப்பவர்களுக்கும், வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும்தான் பாதிப்பு. சொத்து வரி எவ்வளவு உயர்த்தினாலும் அதை வாடகை உயர்வு மூலம் சமாளித்துவிடுவார்கள் என்பதால், வாடகைவீட்டில் வசிப்பவர்கள் நிலைதான் மோசமாகும். ஒட்டுமொத்தமாக 50 சதவிகிதம் உயர்த்தியதற்கு பதில், ஒவ்வொரு ஆண்டும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தியிருந்தால் மக்களுக்கு பாதிப்பு தெரிந்திருக்காது என்கின்றனர் கட்சித் தலைவர்கள்.