Home -> News -> Tamilnadu News -> 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் தமிழகஅரசு உத்தரவு

18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் தமிழகஅரசு உத்தரவு

தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழகஅரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் அவ்வப்போது ஐஏஎஸ்,ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகஅரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் கணேசமூர்த்தி டிஜிபி அலுவலக ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கட்டாய ஓய்விலிருந்த டிஐஜி பாலகிருஷ்ணன், சென்னை குற்றப்பிரிவு இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கட்டாய ஓய்விலிருந்த எஸ்பி விஜயகுமார், பொருளதார குற்றப்பிரிவு எஸ்பியாகயும், டிஜிபி அலுவலக நிர்வாக டிஐஜி செந்தில்குமாரி சென்னை ரயில்வே டிஐஜியாகவும், சென்னை மேற்கு போக்குவரத்து துணை ஆணையர் துரை, திருவாரூர் மாவட்ட எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட எஸ்பி விக்ரமன், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கணினி துணை எஸ்பியாகவும், கோவை சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் லட்சுமி, மேற்கு சரக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாகவும் அரியலூர் மாவட்ட எஸ்பியாக ஸ்ரீநிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.