Home -> News -> Tamilnadu News -> பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் மசோதா தாக்கல்

பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் மசோதா தாக்கல்

பிளாஸ்டிக் பொருட்கள் தடையை மீறினால் அபராதம் விதிப்பதற்கு வழி வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

மூன்று முறை அபராதம் விதித்த பிறகும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்தினால் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பிளாஸ்டிக் தடையை மீறி நடப்பவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை வழங்க வழிவகை செய்யும் மசோதாவை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளார்.

அதன்படி சிறு வணிக விற்பனையாளர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அல்லது விற்பனை செய்தால், முதல் தடவைக்கு ரூ. 100 , 2வது முறைக்கு ரூ. 200 , மூன்றாவது முறையாக ரூ. 500 அபராதம் வசூலிக்கப்படும் என சட்டமுன் வடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.