" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> அரசுப் பேருந்துகளில் கட்டணம் இன்றி விவசாய விளைப்பொருட்களை கொண்டு செல்ல அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு

அரசுப் பேருந்துகளில் கட்டணம் இன்றி விவசாய விளைப்பொருட்களை கொண்டு செல்ல அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்ததை முன்னிட்டு வேளாண் விளைப்பொருட்களை கட்டணமின்றி அரசு பேருந்துகளில் ஏற்றிச்செல்லலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு, 3 ஆம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை குறைக்க கோரி வேலைநிறுத்தம் நீடிக்கிறது. இதையடுத்து நாடு முழுவதும் 85 லட்சம் லாரிகளும், தமிழகம் முழுவதும் 4.5 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. இதனால் தமிழகத்தில் முட்டை, பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளது. வேலைநிறுத்ததினால் தமிழகத்தில் ரூ.300 கோடிக்கு வர்த்தகம் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

லாரிகள் வேலைநிறுத்ததையடுத்து, அரசுப் பேருந்துகளில் கட்டணம் இன்றி விவசாய விளை பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. லாரிகள் வேலை நிறுத்தத்தால் விவசாய விளை பொருட்கள் தேங்காமல் இருக்கவும், மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் அரசு இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது.