Home -> News -> Tamilnadu News -> பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி அடைந்து வருகின்றது – மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி அடைந்து வருகின்றது – மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் ஊழலற்ற நேர்மையான ஆட்சியை தரக்கூடிய ஒரே கட்சி பாரதிய ஜனதாதான் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ஊழலற்ற, நேர்மையான, தூய்மையான அரசு தமிழகத்தில் அமைய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி அடைந்து வருகின்றது.அதேபோல் பிரக்ஞானந்தா மிகப்பெரிய சாதனை படைத்து உலகம் முழுவதும் பாராட்டுக்களை பெற்று இருக்கிறார்.12 வயதுக்குட்பட்டோருக்கான சதுரங்க விளையாட்டு போட்டியில் வைஷாலி பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.சதுரங்க விளையாட்டில் நம் நாட்டை சேர்ந்தவர்கள் மிக பெரிய சாதனையை படைத்து இருக்கிறார்கள் என்றும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்