" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> சிலை திருட்டு வழக்கில் டிவிஎஸ் தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமின் மனு

சிலை திருட்டு வழக்கில் டிவிஎஸ் தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமின் மனு

சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்படக்கூடும் என்ற அச்சத்தில் டிவிஎஸ் குழும நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

வேணு சீனிவாசன் சுந்தரம் கிளேட்டன் லிமிடெட் மற்றும் இந்தியாவின் மூன்றாவது பெரிய இரண்டு சக்கர உற்பத்தியாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவர் 2009-10 ஆண்டுக்கான இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவராகப் பணியாற்றினார்.

இதற்கிடையில் ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவல்குழு தலைவராகவும் இருந்தவர் வேணு சீனிவாசன்.

ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் காரணமாக முதல் கட்ட விசாரணை நாளை தொடங்க இருக்கிறது. விசாரணையை நாளை ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் தொடங்குகிறார். சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்படக்கூடும் என்ற அச்சத்தில் வேணு சீனிவாசன் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை கபாலீஸ்வரர் கோவில் அறங்காவல்குழு தலைவராகவும் வேணு சீனிவாசன் இருந்தர் என்பது குறிப்பிடத்தக்கது