" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேருக்கு ஆதரவாக யாரும் ஆஜராகக்கூடாது என முடிவு

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேருக்கு ஆதரவாக யாரும் ஆஜராகக்கூடாது என முடிவு

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகக்கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அயனாவரம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான 11 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரும் இன்று சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஜூலை 31ம் தேதி வரை நீதிமன்றக்காவல் அளித்து சென்னை மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் நீதிமன்றத்தில் இருந்து கைதான நபர்களை வெளியே கொண்டு வரும்போது, அவர்கள் மீது அங்குள்ள சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்குதல் நடத்தினர். சில வழக்கறிஞர்களும், பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உள்ளேயே தங்க வைக்கப்பட்டனர்.

இதையடுத்து, சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் கூறுகையில், “வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட 17 பேருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகமாட்டோம். இலவச சட்ட உதவி அடிப்படையிலும் யாரும் ஆஜராக மாட்டார்கள். அவ்வாறு முடிவை மீறி ஆஜரானால் அவர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள். இதனை வழக்கறிஞர்கள் இணைந்து ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்” என்றார்.