" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது – காவேரி மருத்துவமனை அறிவிப்பு

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது – காவேரி மருத்துவமனை அறிவிப்பு

கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவால் திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். இதில் கடந்த சில தினங்களுக்கு முன் சிறுநீரக பாதையில் நோய்தொற்று ஏற்பட்டு உடல்நலிவுற்றது. இதனால் பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்களிடம் பரபரப்பு ஏற்பட்டது. நேற்றிரவு அவர் வீட்டிலிருந்து காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில் தற்போது காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திகுறிப்பில், திமுகதலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் தற்போது ஐசியூவில் அனுமதிக்கபட்டுள்ளார். 24 மணிநேரமும் கருணாநிதியை டாக்டர்கள் குழு கண்காணித்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.