" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> சென்னையில் ஆக 14ம் தேதி தி.மு.கவின் அவசர செயற்குழு கூட்டம்

சென்னையில் ஆக 14ம் தேதி தி.மு.கவின் அவசர செயற்குழு கூட்டம்

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் வரும் (14ம் தேதி ) காலை 10 மணிக்கு தி.மு.கவின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவையடுத்து, கட்சியின் அடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாக இன்று கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின், மூத்த தலைவர் க.அன்பழகனை கோபாலபுரம் இல்லத்திற்கு அழைத்துப்பேசினார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு, வருகிற 14ம் தேதி தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14 அன்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இந்த கூட்டமானது நடைபெற உள்ளது. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.