" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின், அழகிரி குடும்பத்தினர் அஞ்சலி

கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின், அழகிரி குடும்பத்தினர் அஞ்சலி

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில், அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இன்றிரவு அஞ்சலி செலுத்தினர்.

உடல்நலகுறைவால் திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7 ம் தேதி மாலை காலமானார். அவரது உடல் அண்ணா சமாதி அருகே நேற்றிரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்று காலை முதலே அவரது உடலுக்கு கவிஞர் வைரமுத்து, கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், நடிகை திரிஷா உள்ளிட்டோர் மலர்துாவி அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிலையில் இன்றிரவு (ஆக 9 ம் தேதி) சுமார் 7.30 மணியளவில் கருணாநிதியின் குடும்பத்தை சேர்ந்த ஸ்டாலின், அழகிரி,கனிமொழி, தமிழரசு, அமிர்தம், கருணாநிதியின் கொள்ளுப்பேரன்கள் உள்ளிட்ட அனைவரும் மலர்துாவி அஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் அஞ்சலி செலுத்தும் சமயம் மெரினாவில் மழை பெய்தது.