" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> குற்றால அருவிகளில் வெள்ளம் குறைந்தது சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

குற்றால அருவிகளில் வெள்ளம் குறைந்தது சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

 

குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு சற்று குறைந்ததை அடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

குற்றாலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் சாரல் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவி ஆகியவற்றில் தொடர்ந்து 3 நாட்களாக வெள்ளப் பெருக்கு குறையாததால் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்த சுற்றுலாப் பயணிகள் சிற்றருவி, புலியருவி சென்று குளித்து ஆறுதல் அடைந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வெள்ளப் பெருக்கு சற்று குறைந்தது.

இதனையடுத்து மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அருவியில் ஓரமாக நின்று பாதுகாப்பாக குளிக்கும் படி சுற்றுலாப் பயணிகளை காவல் துறையினர் கேட்டுக் கொண்டனர். இதனால் உற்சாகம் அடைந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.