Home -> News -> Tamilnadu News -> முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் காலமானார். மாரடைப்பு காரணமாக அடையாரில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 58.

தமிழக சட்டமன்ற உறுப்பினராக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பரிதி இளம்வழுதி 1996 – 2001 காலகட்டத்தில் சட்டமன்ற துணை தலைவராக பதவி வகித்தார். மேலும், 2006 – 2011 திமுக ஆட்சி காலகட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

திமுகவில் இருந்து 2013-ம் ஆண்டு விலகி அதிமுகவில் இணைந்தார். தற்போது டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியில் இருந்தார். அவரது திடீர் மறைவு அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.