Home -> News -> Tamilnadu News -> சென்னையில் விநாயகர் சிலைக்கரைப்பு ஊர்வலம் பாதுகாப்பு பணியில் 20,000 போலீசார்

சென்னையில் விநாயகர் சிலைக்கரைப்பு ஊர்வலம் பாதுகாப்பு பணியில் 20,000 போலீசார்

சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் கடலில் கரைக்க பட உள்ளதால், 20000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உச்சக்கட்ட பாதுகாப்பை போலீசார் ஏற்பாடு செய்து இருந்தனர். கடந்த 3 நாட்களாக சென்னை முழுவதும் பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுவந்தனர். சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 2,500 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டு, பக்தர்கள் வழிபட்டு வந்தனர்.இந்த சிலைகள் வைக்கப்பட்டு உள்ள பகுதிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

மேலும் சென்னையில் மூன்று காவல் கூடுதல் ஆணையர்கள் தலைமையின்கீழ் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக எந்த அசம்பாவிதங்களும் இல்லாமல் இந்த வருடம் விநாயகர் தரிசனத்தை சென்னை மக்கள் ஒன்றாக கூடி கொண்டாடினார்.

இந்நிலையில், இன்று சென்னையில் சுமார் 2,500 இடங்களில் நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் சென்னையிலுள்ள பட்டினம்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு துறைமுகம், எண்ணூர், திருவொற்றியூர் கடல்பகுதிகளில் கரைக்கப்பட உள்ளது.

இன்று நடக்கும் இந்த விநாயகர் சிலைக்கரைப்பு ஊர்வல நிகழ்ச்சிக்கு சுமார் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் இந்த ஊர்வலங்கள் நடக்கும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.