" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> ஐ.டி ரெய்டுகள் குறித்து ஆளுநர் நடவடிக்கை இல்லை எனில் நீதிமன்றத்தை நாடுவோம் மு.க.ஸ்டாலின்

ஐ.டி ரெய்டுகள் குறித்து ஆளுநர் நடவடிக்கை இல்லை எனில் நீதிமன்றத்தை நாடுவோம் மு.க.ஸ்டாலின்

ஐ.டி ரெய்டுகள் குறித்து ஆளுநரிடம் முறையிடும் பொருட்டு தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ராஜ்பவன் சென்றார். தமிழகத்தில் நடைபெறும் ஐ.டி ரெய்டுகள் குறித்து ஆளுநர் நடவடிக்கை இல்லை எனில் நாங்கள் நீதிமன்றத்தை நாட உள்ளோம் என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் நடைபெறும் ஊழல்கள் குறித்தும், ஐ.டி ரெய்டுகள் குறித்தும் ஆளுநரிடம் முறையிடும் பொருட்டு ஸ்டாலின் இன்று ராஜ்பவன் சென்றார். இன்று காலை 11 மணிக்கு நடந்த இந்த சந்திப்பினையடுத்து ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

“தமிழகத்தில் நடைபெற்ற வருமானவரி சோதனைகள் குறித்த தற்போதைய நிலை என்னவென்று தெரியவில்லை. சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு போடப்பட்டுள்ளதா? நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதா? என்று தெரியவில்லை. மேலும், தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை டெண்டர்கள் அனைத்தையும் முதல்வர் தன்வசம் வைத்துள்ளார். அவரது குடும்ப உறவினரகளுக்கு மட்டுமே அளித்து வருகிறார். இது தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம். அவர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்வதாக கூறியிருக்கிறார். அவ்வாறு ஆளுநர் நடவடிக்கை இல்லை எனில் நாங்கள் நீதிமன்றத்தை நாட உள்ளோம்” என்றார்.