" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> எஸ்.பி.கே குழுமத்தில் 2வது நாளாக வருமானவரி சோதனை

எஸ்.பி.கே குழுமத்தில் 2வது நாளாக வருமானவரி சோதனை

எஸ்.பி.கே குழுமத்தில் நடைபெற்று வரும் வருமான வரி சோதனையில் 160 கோடி ரூபாயும், 101 கிலோ தங்கமும் கிடைத்துள்ளது.

அருப்புக்கோட்டையை தலைமையிடமாக கொண்ட எஸ்.பி.கே. குழுமம், தேசிய நெடுஞ்சாலை, மற்றும் மாநில சாலைப்பணிகளை காண்டிராக்ட் எடுத்து மேற்கொண்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் கீழமுடிமன்னார்குடியைச் சேர்ந்த செய்யாத்துரையின் மகன்களான நாகராஜன், பாலசுப்பிரமணியன், ஈசுவரன், கருப்பசாமி மற்றும் நாச்சியப்பன் ஆகியோர் எஸ்.பி.கே குழுமத்தின் இயக்குநர்களாக உள்ளனர்.

இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வந்த புகாரை அடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் அருப்புக்கோட்டை ஆனந்தபுரி நகரில் உள்ள செய்யாத்துரை மற்றும் அவரது மகன்களின் வீடுகளில் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

இதுதவிர சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், கல்குவாரி, நூற்பாலை ஆகியவற்றில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் 160 கோடி ரூபாயும், 101 கிலோ தங்கமும் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வருமான வரி அதிகாரிகளின் சோதனை இன்று 2வது நாளாக நீடித்து வருகிறது.