" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> கருணாநிதி நலமுடன் இருப்பதாக தெரிவித்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

கருணாநிதி நலமுடன் இருப்பதாக தெரிவித்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை, கோபாலபுரம் இல்லத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். மூத்த அமைச்சர்கள் சென்று தி.மு.க தலைவர் கருணாநிதியின் நலம் குறித்து விசாரித்தார்கள்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. அவரது சிறுநீரக பாதையில் நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை அறிக்கை கூறியது.

கருணாநிதியின் உடல்நிலை குறித்த இந்த அறிக்கை இன்று (ஜூலை 26) இரவு 7 மணிக்கு வெளியானது. கருணாநிதியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு தொண்டர்கள் யாரும் நேரில் வரவேண்டாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

மருத்துவக்குழுவினர் வீட்டிலேயே இருந்து அவர்களை கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கருணாநிதியை சந்திக்க துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தனர். அங்கு மு.க.ஸ்டாலின் உடன் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் சந்தித்து பேசினர்.

கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்து விட்டு புறப்பட்டனர். சந்திப்புக்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறுகையில், கருணாநிதியை சந்தித்து பேசினோம். விரைவில் அவர் குணமடைவார் என தெரிவித்தார்.

ஓ.பன்னீர் செல்வமும் கருணாநிதி நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.