" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியனுக்கு இன்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைகள் முடிந்து, அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனைத் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உடல்நலக் குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவமனைக்குச் சென்று தா.பாண்டியனை நேரில் பார்த்து நலம் விசாரித்தார். அப்போது அவருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் பொன்முடி, சேகர்பாபு ஆகியோரும் சென்றிருந்தனர்.