" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> தாக்கப்பட்ட மாணவரிடம் வருத்தம் தெரிவித்த காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்

தாக்கப்பட்ட மாணவரிடம் வருத்தம் தெரிவித்த காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்

சென்னை சேத்துப்பட்டில் கல்லூரி மாணவரை தாக்கிய உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மாணவரை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்த காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நடந்த சம்பவத்துக்காக வருத்தமும் தெரிவித்தார்.

சமீபத்தில் , சூளை மேட்டைச் சேர்ந்த ஹாரூன் எனும் கல்லூரி மாணவர், கடந்த 19-ம் தேதி இரவு, நண்பரான ஹாசனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது செட்டாங் சாலையில் வாகன சோதனையில் ஆவணங்களைக் காண்பித்தும் கூட போலீசார் பணம் கேட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில், சேத்துப்பட்டு காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா லத்தியால் தாக்கியதால் மாணவன் ஹாரூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ஹாரூன் புகார் அளித்ததையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தேவையில்லாமல் தாக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து உதவி ஆய்வாளர் இளையராஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர் வீட்டுக்கே சென்ற சென்னை காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் மாணவன் ஹாரூனிடமும், அவரது குடும்பத்தினருடமும் நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்தார்.