" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> டிடிவி தினகரன் வீட்டின் அருகே கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் விசாரணை

டிடிவி தினகரன் வீட்டின் அருகே கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் விசாரணை

சென்னையில் டி.டி.வி தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பட்டு ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே நகர் எம்.எல்.ஏ.வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக உள்ள டிடிவி தினகரனின் வீடு சென்னை அடையாறு பகுதியில் உள்ளது. இந்நிலையில், இன்று பகல் 12.30 மணியளவில் அவரது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்ட காரின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இந்த குண்டு வீச்சில் காரின் டிரைவர் பாண்டித்துரை, போட்டோகிராபர் உள்ளிட்ட மூவர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொர்டபாக அடையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.