" /> My Title page contents
Home -> News -> Tamilnadu News -> சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை

சென்னையில் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக காலையில் வெப்பம் அதிகரித்து வந்தாலும், மாலை வேளைகளில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அந்தந்தப் பகுதிகள் குளிர்ந்தன. சென்னையில் எழும்பூர், நுங்கம்பாக்கம், வடபழனி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. அதிகாலை முதல் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.