Home -> News -> Tamilnadu News -> சென்னையில் இடியுடன் மழை

சென்னையில் இடியுடன் மழை

சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்துள்ளது. திருவல்லிக்கேணி, அம்பத்தூர், கொளத்தூர், அமைந்தகரை, பெரம்பூர், ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அண்ணாநகர், கோடம்பாக்கம், கீழ்ப்பாக்கம், ஈக்காட்டுத்தாக்கல் ஆகிய பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மழையோடு பலத்த காற்றும் வீசுகிறது. சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் கொட்டும் மழையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகின்றன.

இதேபோன்று கோயம்பேடு, வளசரவாக்கம், வானகரம், ஐயப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், கொளத்தூர், அமைந்தகரை, செங்குன்றம், பூவிருந்தவல்லி, அண்ணாநகர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.