Home -> News -> Tamilnadu News -> கடந்த ஒரு வருட காலத்தில் பேரசிரியை நிர்மலாதேவி ஆளுநா் மாளிகைக்கு வந்ததே கிடையாது – ஆளுநா் மாளிகை \விளக்கம்

கடந்த ஒரு வருட காலத்தில் பேரசிரியை நிர்மலாதேவி ஆளுநா் மாளிகைக்கு வந்ததே கிடையாது – ஆளுநா் மாளிகை \விளக்கம்

கடந்த ஒரு வருட காலத்தில் பேரசிரியை நிர்மலாதேவி ஆளுநா் மாளிகைக்கு வந்ததே கிடையாது என்று ஆளுநா் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையில் செயல்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது தொடா்பாக பலரும் செய்தி வெளியிட்டு வருகின்றனா். இதே போன்று நக்கீரன் வார இதழில் பேரசிரியை நிர்மலாதேவி தொடா்பான கட்டுரை வெளியானது. இந்த கட்டுரையில் ஆளுநரை விமா்சித்ததாக கூறி ஆளுநா் மாளிகை சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு அந்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டார்

தொடர்ந்து நிலவும் சர்ச்சைகள் குறித்து ஆளுனர் மாளிகை வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது, கடந்த ஒரு வருட காலத்தில் பேரசிரியை நிர்மலாதேவி ஆளுநா் மாளிகைக்கு வந்ததே கிடையாது. மேலும் மதுரை காமராஜா் பல்கலைக்கழக விழாவிற்கு ஆளுநா் சென்ற போது அவரது செயலாளா் உடன் செல்லவில்லை. ஆளுநா் பல்கலைக்கழக விருந்தினா் மாளிகையிலும் தங்கவில்லை. ஆளுநரின் செயலாளரையும் நிர்மலாதேவி சந்தித்ததில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநருக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை சகித்துக்கொள்ள முடியாது