Home -> News -> Tamilnadu News -> முதல்வர் பழனிசாமியுடன் ரஜினிகாந்த் சந்திப்பு

முதல்வர் பழனிசாமியுடன் ரஜினிகாந்த் சந்திப்பு

தமிழக முதல்வர் பழனிசாமியை இன்று சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினா

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா மற்றும் விஷாகன் ஆகியோரது திருமணம் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நாளை நடைபெறுகிறது. இந்த விழாவில் ரஜினிகாந்தின் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்த தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று காரில் சென்றார். அங்கு அவரை சந்தித்து தனது மகள் திருமண அழைப்பிதழை வழங்கினார். இதன்பின்னர் அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த், திருமண விழாவிற்கு வருகை தருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார் என கூறினார்.